Showing posts with label கற்பனைக் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கற்பனைக் கிறுக்கல்கள். Show all posts
Friday, October 14, 2011
Tuesday, October 04, 2011
பிறந்தது கவிதை!
நட்சத்திரத்துக்கு ரெக்கை முளைத்தது
பிறந்தது மின்மினிப் பூச்சி!
அன்னையின் அன்பு போதையில்
தள்ளாடியது தொட்டில் - மழலைக்கு
பிறந்தது தூக்கம்!
மனம் கொள்ளை
பிறந்தது காதல்!
மணல் கொள்ளை
பிறந்தது பாலைவனம்!
அரிதாரம் பூசப்பட்டது சிந்தனைக்கு
பிறந்தது கவிதை!
Tags:
கற்பனைக் கிறுக்கல்கள்
Thursday, September 29, 2011
Friday, September 16, 2011
ஓ விவசாயியே!
உன் தேகத்தின் கருமை - துடைத்திடும் என் தேசத்தின் வறுமை!
உழைப்பின் மீது நீ கொண்ட பாசம் - என் தேசத்தின் சுவாசம்!
உன் கால் சேற்றில் - என் கை சோற்றில்!
கர்ணன் பிறந்த இவ்வுலகில், உனக்கு
மண்புழுக்கள் மட்டுமே நட்பாகிப் போன அவலம் தான் என்ன?
துரத்துவான் உன்னை முதலாளிப் பேய்
ஆகிவிடாதே நீ பகடைக் காய்!
நிலத்தில் நெல்லையும், நெஞ்சில் 'தில்'லையும் பயிர் செய்!
அப்பயிர் உனக்கு உயிர் செய்யும்!
மனதில் 'தில்'லை வளர். அது தில்லைக்கு நிகர்!
பட்டுப்போவது மரம் மட்டுமே! மறம் அன்று!
உழுதுண்டு வாழ்பவனே! வாழிய உன் வைராக்கியம்!
Tags:
கற்பனைக் கிறுக்கல்கள்
Thursday, September 08, 2011
Subscribe to:
Posts (Atom)


