Friday, September 16, 2011

ஓ விவசாயியே!


ஓ விவசாயியே!
உன் தேகத்தின் கருமை - துடைத்திடும் என் தேசத்தின் வறுமை!
உழைப்பின் மீது நீ கொண்ட பாசம் - என் தேசத்தின் சுவாசம்!
உன் கால் சேற்றில் - என் கை சோற்றில்!

கர்ணன் பிறந்த  இவ்வுலகில், உனக்கு
மண்புழுக்கள் மட்டுமே நட்பாகிப் போன அவலம் தான் என்ன?
துரத்துவான் உன்னை  முதலாளிப் பேய்
ஆகிவிடாதே நீ பகடைக் காய்!

 நிலத்தில் நெல்லையும், நெஞ்சில் 'தில்'லையும் பயிர் செய்!  
அப்பயிர் உனக்கு  உயிர் செய்யும்!
மனதில் 'தில்'லை வளர். அது தில்லைக்கு நிகர்!
பட்டுப்போவது மரம் மட்டுமே! மறம் அன்று!


வானம் பொய்த்தினும் பொய்யாது வள்ளுவன் வாக்கு
- "உழுவார் உலகத்தார்க்கு ஆணி"
 உழுதுண்டு வாழ்பவனே!  வாழிய உன் வைராக்கியம்!

No comments:

Post a Comment